சென்னை:கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் "வொண்டர்லஸ்ட்" (Wonderlust) நிகழ்ச்சியில், ஐபோன் 15 சீரிஸ் வகைகள் மற்றும் ஆப்பிள் வாட்ச் வகைகளையும் வெளியிட்டது. இது ஆப்பிள் வாடிக்கையாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
முன்னதாக ஆப்பிள் ஐபோன்களில் Type-C ரக சார்ஜர்கள் கொண்டு வருவது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள ஐபோன் 15 ரகத்தில் அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதில் டைனமிக் ஐலாண்டு (Dyanamic Island) அமசம் ஐபோன் 15 சீரிஸில் உள்ள அத்தனை வகை ஐபோன்களிலும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஐபோன் 15-இல் OLED ரக ரெட்டினா டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இதில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்பிளே மூலம், டால்பி தரத்தில் படங்களை காண முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே தரம் ஐபோன் 14 விட, ஐபோன் 15-இல் உயர்த்தப்பட்டுள்ளது.
பொதுவாகவே, ஐபோன்களின் மேமராவின் தெளிவு அனைவரையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் இருக்கும். இந்நிலையில் ஐபோன் 15-இல் கேமராவின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ரக ஐபோன்களில் உள்ள கேமராக்கள் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளது.
அதில் 48 மெகாபிக்ஷல் திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், நிறங்களை தத்ரூபமாக படம் பிடிக்க உதவும் வகையில் மென்பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், போர்ட்ரெட் (Portrait) ரக புகைப்படங்கள் எடுக்கவும் அதி நவின மென்பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், போனின் எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக தனிச்சிறப்பான உலோகங்களால் உருவாக்கப்படுள்ளது. குறிப்பாக, டைட்டானியம் ரக உலோகங்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோன் 15 ரக ஐபோன்கள் மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு, பிங்க் போன்ற நிறங்களில் வெளியிட்டுள்ளது.
உலக அளவில் வெளியாகும் ஐபோன்களின் விலை பெரும்பாலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாற்றம் அடையும், அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பின்படி, இன்று முதல் இதன் விற்பனை துவங்கியுள்ளது. இதனை அடுத்து மும்பையில் ஆரம்பிக்கப்பட்ட, இந்தியாவின் முதல் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மையத்தின் முன்பு ஏராளமான வாடிக்கையளர்கள் குவிந்தனர்.