பெங்களூரு:இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் தங்களது உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக பெங்களூருவின் மையப் பகுதியில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. பெங்களூருவில் மின்ஸ்க் ஸ்கொயர் (minsk square) என்ற மாநகராட்சியின் மையப் பகுதியில் 1200 ஊழியர்கள் பணியாற்றும் வகையில், லேப், இளைப்பாறும் பகுதி உள்ளிட்ட 15 தளங்களுடன் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ஏற்கனவே பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கட்டமைப்பு, வாடிக்கையாளர்கள் உரையாடல் உள்ளிட்டவற்றிற்கு நாட்டின் முக்கிய பகுதியாக உள்ளது. ஆப்பிள் நிறுவன ஊழியர் இந்த அலுவலகம் குறித்து கூறுகையில், "இந்த அலுவலகம் மற்ற அலுவலகம் போலவே படைப்பாற்றல், ஊழியர்களின் உறவு மேம்படுதல், அணி ஒற்றுமை ஆகியவை மேம்பட அற்புதமான இடமாக இருக்கும்” என கூறியுள்ளார்.
ஆப்பிள் அலுவலகம் உள்நாட்டு கட்டுமான பொருட்களுடன், உள் கட்டமைப்பு ஆகியவை பல்வேறு டிசைன்களில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் தங்களது வசதிகளை 2018ஆம் ஆண்டு முதல் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடன் உருவாக்கி வருகிறது. இந்தியாவில் ஆப்பிள் அலுவலகம் மும்பை, ஹைதராபாத், குருகிராம் ஆகிய கிளைகளுக்கு பிறகு பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளது.