மும்பை : இந்தியாவுக்கான ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனையகத்தை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் மும்பையில் துவக்கி வைத்தார். இந்தியாவுடான 25 ஆண்டு கால வர்த்தகத்தை கொண்டாடும் விதமாக பிரத்யேக விற்பனையகத்தை தொடங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்தது.
இந்தியாவின் நிதி தலைநகரமான மும்பையில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனையகம் தொடங்கப்பட்டு உள்ளது. நேரடி விற்பனையகத்தை ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்தார். இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகை மாதுரி தீட்ஷித், ஷில்பா ஷெட்டி, ரகுல் பிரீத் சிங் உள்ளிட் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஸ்டோர் இந்தியாவில் திறக்கப்படுவதை முன்னிட்டு நூற்றுக்கணக்கான வாடிக்கையாள்ரகள் காலை முதலே அந்த கடையின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏறத்தாழ 28 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு உள்ள ஆப்பிள் விற்பனையகத்தை நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் முன்னிலையில் டிம் குக் திறந்து வைத்தார்.