இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அடுத்தபடியாக ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசியும் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டிற்கு இந்தியா மருந்து கட்டுப்பாட்டு மையம் அனுமதி அளித்ததையடுத்து, முதற்கட்டமாக 1.5 லட்சம் தடுப்பூசிகள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்து டாக்டர் ரெட்டி நிறுவனத்திற்கு விநியோகம் செய்யப்பட்டன. இந்த தடுப்பூசிகளை அப்பல்லோ மருத்துமனை நிர்வாகத்துடன் இணைந்து டாக்டர் ரெட்டி நிறுவனம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.