ஆந்திர மாநிலத்தில் கஞ்சா கடத்த முயன்ற இரண்டு நபர்களை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திர - ஒடிசா எல்லை: அர்த்த ராத்திரியில் கிடைத்த தகவல்... ரூ.2 கோடி மதிப்புடைய கஞ்சா பறிமுதல் - ஆந்திர - ஒடிசா எல்லை
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கஞ்சா கடத்த முயன்ற இரண்டு நபர்களை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்திலிருந்து பிகார் மாநிலத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அப்போது ஆந்திர மாநில எல்லையில் விஜயநகரத்தின் அருகில் இருக்கும் கோச்சிகா கிராமத்திற்கு வந்த வாகனத்தை காவல் துறையினர் பரிசோதித்தனர். அப்போது, வாகனத்தில் இருந்த ரகசிய அலமாரிகளில் இருந்து சுமார் 800 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அஸ்ஸாமில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்- பாஜக