சித்தூர் (ஆந்திர பிரதேசம்):ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பங்காரபுரம் சில்லாகுண்டாலப்பள்ளி ஆரம்பபள்ளியில் அபு (58) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்தப் பள்ளியில் படிக்கும் 4 மற்றும் 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் 11 பேரிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததாக எழுந்த புகாரையடுத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் பள்ளிக் குழந்தைகளை இது குறித்து அவர்கள் பெற்றோரிடம் தெரிவித்தால் மாற்றுச் சான்றிதழ் (டிசி) வழங்கி விடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் இந்த ஆசிரியரின் தொடர் தொல்லைகளை தாங்க முடியாத குழந்தை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. பின்னர் அந்த பெற்றோர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாரயணனிடம் தெரிவித்தனர்.