தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பணத்திற்காக காதலியை மிரட்டிய காதலன் கைது! - காதலி புகார்

பணத்திற்காக காதலியையும், அவரது குடும்பத்தையும் மிரட்டிய காதலனை போலீசார் கைது செய்தனர். பணம் கொடுக்கவில்லை என்றால், காதலியுடன் இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக காதலன் மிரட்டியுள்ளார்.

vizianagaram
vizianagaram

By

Published : May 8, 2022, 4:50 PM IST

அமராவதி: ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் ஷிரெட்டி நவீன்(24) என்பவர் கட்டட பொறியாளர் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடன் பணிபுரிந்த பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக நவீன் உறுதியளித்துள்ளார். இவர்களது காதலுக்கு இரண்டு குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் வீடு கட்டுவதற்கு பணம் தரும்படி பெண்ணின் பெற்றோரிடம் நவீன் கேட்டுள்ளார்.

தங்களிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை என பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் நவீனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அப்பெண்ணுக்கு அனுப்பிய நவீன், பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

அப்பெண்ணின் தந்தைக்கும் புகைப்படங்களை அனுப்பி, சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், நவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆழ்ந்து தூங்கிய மனைவி, தலையை துண்டித்த கணவன்.. அன்னையர் தினத்தில் அநாதையான இரு குழந்தைகள்..!

ABOUT THE AUTHOR

...view details