பிரிக்கப்பட்ட ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகர் தொடர்பான வழக்கு ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் மாநில அரசு மற்றும் மனுதாரர்களின் வாதங்களை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநில அரசு CRDA சட்டப்படி செயல்பட வேண்டும் எனவும், அமராவதி தலைநகர் வளர்ச்சிப் பணிகளை ஆறு மாதத்திற்கு நிறைவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், திட்டப்பணிகளுக்காக வேளாண் நிலங்களை கொடுத்த விவசாயிகளுக்கு உரிய மனைகளை கொடுக்க வேண்டும் எனவும், தலைநகர் வளர்ச்சிப் பணிகள் குறித்த நீதிமன்றத்தில் உடனுக்குடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.