தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேவை ஏற்பட்டால் இந்தியா எல்லை தாண்டி தாக்குதல் நடத்தும் - ராஜ்நாத் சிங்

தேவை ஏற்பட்டால் எல்லையைத் தாண்டி பயங்கரவாத இலக்குகளை தாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Anyone causing trouble on borders will not be spared: Rajnath Singh
Anyone causing trouble on borders will not be spared: Rajnath Singh

By

Published : Dec 30, 2020, 10:21 AM IST

டெல்லி:பாகிஸ்தான் உருவானதிலிருந்தே எல்லையில் அந்நாடுபல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் பாகிஸ்தான் 300 முதல் 400 முறை போர்நிறுத்த மீறல்களில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்தியா அந்தத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி அளித்துவருகிறது.

"ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க துருப்புகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. தேவை ஏற்பட்டால் அவர்கள் எல்லைத் தாண்டி பயங்கரவாத மறைவிடங்களையும் தாக்கலாம். உரி பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், 2016ஆம் ஆண்டில் எல்லை தாண்டி பயங்கரவாத ஏவுதளங்களில் இந்தியா துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியது.

பின்னர், புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டில் பாலகோட்டில் பயங்கரவாத முகாமில் வான்வழித் தாக்குதலை நடத்தியது" என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜந்த் சிங்

இந்த மாத தொடக்கத்தில் துண்டிகலில் உள்ள விமானப்படை அகாதமியில் நடந்த பட்டமளிப்பு அணிவகுப்பின்போது பேசிய அவர், நான்கு போர்களில் தோல்வியுற்ற பின்னரும், பாகிஸ்தான் அண்டை நாட்டின் எல்லையில் தீங்கு விளைவிக்கும் செயல்களைத் தொடர்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க:5,100 முறை பாகிஸ்தான் அத்துமீறல் - அதிர்ச்சி ரிப்போர்ட்

ABOUT THE AUTHOR

...view details