டெல்லி:ராகுல் காந்தி, தனது வெளிநாட்டு பயணத்தின் போது இந்தியாவை அவமதித்து வருகிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள், பாராட்டுக்களை தெரிவித்து இருப்பதை பார்த்து, ராகுல் காந்தி விரக்தியடைந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி எல்லாவற்றையும் அறிந்தவர் என்று கூறி இருந்தார். ராகுல் காந்தி, தனது ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும், இந்தியாவை அவமதித்து வருகிறார். அதற்கு, அவர் தற்போது மேற்கொண்டுள்ள அமெரிக்க சுற்றுப்பயணத்திலும் அதை செய்ய அவர் தவறவில்லை.
இதையும் படிங்க: கலிபோர்னியாவில் ராகுலுக்கு எதிராக பாஜகவினர் கோஷம்.. கூலாக டீல் செய்த ராகுல்!
அவர் பிரதமர் மோடியை அவமதிக்க நினைக்கிறார், ஆனால், அது, நாட்டை அவமதிப்பதில் முடிகிறது. ராகுல் காந்தி, இந்தியாவை ஒரு நாடாக கருதவில்லை என்பதையும், அது மாநிலங்களின் ஒன்றியம் என்று அவர் நம்புவதாகவே, அவரது செயல்பாடு உள்ளது. ராகுல் காந்தி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், இந்தியா மற்றும் நாட்டு மக்கள் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.