டெல்லி: ஜந்தர்மந்தரில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக பிரமுகர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய இஸ்லாமியர்களின் அரசியல், சமூக, பொருளாதார எதிர்காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசுகையில் தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார்.