டெல்லி:டெல்லி மாநகராட்சி ஷாகின் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மீண்டும் தொடங்கியுள்ளது. மேலும் இப்பணிக்காக புல்டவுசர் வண்டிகளை டெல்லி மாநகராட்சி நியு ஃப்ரண்ட்ஸ் காலனிக்கு கொண்டு வந்துள்ளது.
சென்ற திங்கள் (மே3) அன்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் பலர் போராடினர். இதனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது குறித்து தெற்கு டெல்லி மாநகராட்சியின் மத்திய மண்டலத் தலைவர் ராஜ்பால் சிங் கூறுகையில், ‘நியூ பிரண்ட்ஸ் காலனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
எங்கள் அமலாக்கக் குழுக்கள் போதுமான போலீஸ் படை மற்றும் புல்டோசர்கள் மற்றும் லாரிகள் போன்ற உபகரணங்களுடன் பௌதா தர்மா கோவில், குருத்வாரா சாலை மற்றும் நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனியின் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டங்கள், குடிசைகள் மற்றும் கடைகளை அகற்றத் தொடங்கியுள்ளன எனத் தெரிவித்தார்.