தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு! - கன்னூரில் ஒருவருக்கு குரங்கம்மை

கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Kannur
Kannur

By

Published : Jul 18, 2022, 7:32 PM IST

கண்ணூர்(கேரளா): நாட்டில் முதல்முறையாக கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து, கேரளாவின் கொல்லம் மாவட்டத்திற்கு வந்த 35 வயதான நபருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து, குரங்கம்மை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் நோய்த் தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் ஒருவருக்கு குரங்கம்மை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். 31 வயதான அந்த நபர் துபாயிலிருந்து வந்துள்ளதாகவும், அவருக்கு குரங்கம்மை வைரஸ் அறிகுறிகள் தென்பட்டதால், அவர் தாமாக வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர். அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையில் உள்ளார் என்றும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குரங்கம்மை வைரஸ் பரவல்... தெரிந்துகொள்ள வேண்டியவை....!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details