பார்கர்க் :ஒடிசா மாநிலம் பார்கர் பகுதியில் இன்று(ஜூன் 5) சரக்கு ரயில் தண்டம் புரண்டு விபத்துக்குள்ளானது. கடந்த ஜூன் 2ஆம் தேதி பாலசோர் அருகே சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு - ஹவுரா விரைவு ரயில், சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 275 பேர் இதுவரை உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்ட மக்கள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அதே ஒடிசா மாநிலத்தில் மற்றொரு சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பார்கர் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.