கர்நாடகா: கன்னட சின்னத்திரை நடிகை சேத்தனா ராஜ் (21), கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ததன் விளைவாக அண்மையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் பெங்களூருவில் பெண்மணி ஒருவர் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்து, பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றும் டெல்லியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார்.சிகிச்சை முடிந்த பத்து நாட்களுக்குப் பிறகு அவருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அறுவை சிகிச்சை செய்த இடத்தில் சீழ் பிடித்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்மணி அழுது கொண்டே வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.