தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி: 5ஆவதாக ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா - நம்பிக்கை வாக்கெடுப்பு

5ஆவதாக ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா
5ஆவதாக ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

By

Published : Feb 21, 2021, 2:56 PM IST

Updated : Feb 21, 2021, 4:21 PM IST

14:49 February 21

புதுச்சேரி: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார்.

5ஆவதாக ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

புதுச்சேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகியோர் ராஜினாமா செய்திருந்த நிலையில், ராஜ் பவன் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி நாளை பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், 5ஆவதாக ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமி நாராயணன் ராஜினாமா செய்ததால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 27ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 13, எதிர்க்கட்சிகள் 14 முறையே உள்ளன. இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ அதிக வாய்ப்புகள் உள்ளன.

Last Updated : Feb 21, 2021, 4:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details