ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிப்.20ஆம் தேதி திங்கட்கிழமை விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெருநாய்கள் கடித்து தாக்கியதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்தச் சம்பவம் நடந்த சோகம் மறையும் முன், அதே ஊரில் இன்னொரு சிறுவன் தெருநாய்களால் தாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைதன்யபுரி, மாருதி நகர் சாலை எண் 19-ல், உள்ள ஜெயின் மந்தீரில் திங்கள்கிழமை இரவு மீண்டும் ஒரு 4 வயது சிறுவன் (ரிஷி) தெரு நாய்களால் தாக்கப்பட்டான். அந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் காலனி மக்கள் ஓடி வந்து தெருநாய்களை கற்கள் மற்றும் கட்டைகளால் விரட்டி காப்பாற்றினர்.