மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவு - பாரத் பயோடெக் - தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவு
![மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவு - பாரத் பயோடெக் தடுப்பூசி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10152628-578-10152628-1610016364842.jpg)
15:27 January 07
டெல்லி: கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவடைந்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவடைந்துவிட்டதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மூன்றாம் கட்ட சோதனைக்காக 25,800 தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் இரண்டு கட்ட பரிசோதனை முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனை நவம்பர் மாதம் தொடங்கியது. இரண்டாம் கட்ட தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாநிலங்களிலும் நாளை (ஜனவரி 8) நடைபெறவுள்ளது. முன்னதாக, முதல் கட்ட ஒத்திகை ஜனவரி 2ஆம் தேதி நடைபெற்றது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணைந்து தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்கும் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஜனவரி 3ஆம் தேதி வழங்கியது.
TAGGED:
பாரத் பயோடெக்