தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழ்நாடு காவல் அலுவலர்கள் 8 பேருக்கு மத்திய அரசு விருது - 8 tamilnadu police

மத்திய அரசின் பணிக்கான விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு காவல் அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு விருது
மத்திய அரசு விருது

By

Published : Aug 12, 2021, 6:10 PM IST

2018ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, குற்ற வழக்குகளை சிறப்பாக விசாரணை நடத்திய காவல் அலுவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குற்ற வழக்குகள் சம்பந்தமான விசாரணைகளில் தொழில்முறைத் தன்மையை ஊக்குவிக்கவும், சிறப்பாக விசாரணை நடத்துபவர்களை ஊக்குவிக்கவும், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. காவல்துறை மட்டுமின்றி, சிபிஐ, என்.ஐ.ஏ அலுவலர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

கடந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு காவல் அலுவலர்கள் இந்த விருதைப் பெற்றனர். அதன்படி இந்தாண்டு நாடு முழுவதும் 152 காவல் அலுவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் இன்று (ஆக.12) விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு காவல் அலுவலர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

8 காவல் அலுவலர்கள் விவரம்

  1. நாகப்பட்டினம் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சரவணன்
  2. திருவண்ணாமலை அனைத்து மகளிர் நிலையம் காவல் ஆய்வாளர் அன்பரசி
  3. கடலூர், புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கவிதா
  4. திருவள்ளூர், வெங்கல் காவல் ஆய்வாளர் ஜெயவேல்
  5. செங்கல்பட்டு, திருப்போரூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி
  6. சென்னை பெருநகர உளவுப்பிரிவு காவல் ஆய்வாளர் மணிவண்ணன்
  7. சென்னை குரோம்பேட்டை, காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன்
  8. நாகர்கோவில் சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் கண்மணி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவர்களுக்கு சுதந்திர தினத்தன்று(ஆக.15) விருதுகள் வழங்கப்படும்.

இதையும் படிங்க: புதிய பேருந்துகளை இயக்க ஜெர்மனியுடன் பேச்சுவார்த்தை’ - அமைச்சர் ராஜகண்ணப்பன்

ABOUT THE AUTHOR

...view details