நடிகர் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கரோனா காரணமாக பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்ணாத்த படக்குழுவில் படப்பிடிப்பின்போது தளத்தில் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியிருப்பதாவது.
அண்ணாத்த செட்டுக்குள் வரும்போது மொத்த உடலையும் சானிடைஸ் செய்கிறார்கள். படக்குழுவை சேர்ந்த அனைவரும் பிபிஇ சூட் அணிய வேண்டும். செட்டுக்கு முதல் முறை வந்தால் ஒரு மருத்துவமனைக்குள் நுழைந்தது போன்று தோன்றும். இதில் அசிஸ்டன்ட் யார், மேக்கப் மேன் யார் என்று கண்டே பிடிக்கமுடியாது என்கிறார்கள்.
மேலும் ஒளிப்பதிவாளர் கூட பிபிஇ சூட்தான் அணிய வேண்டும். இதுதவிர நடிகர்கள், நடிகைகள் மாஸ்க் தவிர்த்து ஃபேஸ் ஷீல்டும் அணிய வேண்டும். அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பின்போது அவர்கள் அடிக்கடி சானிடைஸ் செய்ய வேண்டும்.
இயக்குநர் சிவா இரண்டு மாஸ்க்குகள் அணிகிறார். மைக் மூலம்தான் பேசுவார். சிவாவும், தயாரிப்பு தரப்பும் ஒரு குழந்தையை பார்த்துக்கொள்வது போன்று ரஜினியை பார்த்துக்கொள்கிறார்கள். ரஜினியிடம் இருந்து அனைவரும் சுமார் 10 அடி தூரம் தள்ளியே நிற்க வேண்டும் என்று கட்டளையே போடப்பட்டுள்ளது என்கிறார்.
ரஜினியுடன் சேர்ந்து நடிப்பவர்களை தவிர வேறு யாருமே ரஜினி அருகில் செல்ல அனுமதி இல்லை. ரஜினியுடன் ஒரு காட்சி குறித்து பேசும்போது இயக்குனர் சிவா 3-4 அடி தள்ளி நின்றுதான் பேசவேண்டும் என்பதும் வாய்மொழி உத்தரவு.
ரஜினி அருகே இயக்குனர் சிவா செல்வது இல்லை. அதனால்தான் அண்மையில் வெளியான போட்டோவில்கூட இருவரும் தள்ளி நின்றார்கள். ரஜினி நடிக்கும்போது அந்த இடத்தை கருப்புத் துணியால் மூடிவிடுவார்கள்.
வழக்கமாக ரஜினி ஷூட்டிங்கில் இருக்கும்போது படக்குழுவை சேர்ந்தவர்கள் அவரிடம் சகஜமாக பேசுவார்கள், ஆசி வாங்குவார்கள், போட்டோ எடுப்பார்கள். ஆனால் இம்முறை அப்படியில்லை
ரஜினியை குழந்தையை போல் பார்த்துக்கொள்ளும் படக்குழு! - Actor rajinikanth
அண்ணாத்த படக்குழுவினர் நடிகர் ரஜினியை ஒரு குழந்தையை போல் பார்த்துக்கொள்வதாக படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
அண்ணாத்த
ரஜினியின் உதவியாளர் மட்டுமே அவர் அருகில் செல்ல முடியும், மேக்கப் போட முடியும். மற்ற கலைஞர்களின் உதவியாளர்கள் யாரும் ரஜினி அருகே செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.