தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவில் வாக்களித்த ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் - Annalena Baerbock visits ECI

இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்த வாக்குப்பதிவு எந்திரத்தில் தனிப்பட்ட முறையில் ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் வாக்களித்தார். இவிஎம்களின் வலுவான பாதுகாப்பு அம்சங்கள், கையாளுதல், இயக்கம், சேமிப்பு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

Annalena Baerbock
Annalena Baerbock

By

Published : Dec 6, 2022, 9:45 PM IST

டெல்லி:இந்தியா ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இந்தியாவின் தலைமையின் கீழ் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஜி20 ஷெர்பா கூட்டம் நடந்துவருகிறது. இந்த கூட்டத்தில் வங்கதேசம், எகிப்து, மொரிஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தைப் போலவே நாட்டின் பல்வேறு மாநிலங்களின் ஜி20 கூட்டங்கள் நடக்கவிருக்கின்றன.

இந்த கூட்டங்களில் பங்கேற்க ஜி20 நாடுகளின் உறுப்பினர்கள் வருகை தருகின்றனர். அந்த வகையில், டெல்லியில் நடக்கும் ஜி20 கூட்டத்தில் கலந்துகொள்ள ஜெர்மனி வெளியுறவுத்தறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். டெல்லியில் தங்கியிருக்கும் அன்னாலெனா பேர்பாக், அங்குள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு இன்று (டிசம்பர் 6) சென்றுள்ளார். அப்போது, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோரை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறுகையில், ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் தலைமையிலான ஜெர்மனி குழுவுக்கு, இந்தியாவின் பல்வேறு புவியியல், கலாச்சாரம் மற்றும் 96 கோடி வாக்காளர்களை சமாளிக்கும் இந்தியத் தேர்தல் ஆணைய நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து விளக்கப்பட்டது.

அதோடு வாக்காளர்களின் பங்கேற்பு, அரசியல் கட்சிகள்/வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் எந்திரத் தளவாடங்கள் ஆகியவற்றில் தேர்தல் ஆணையத் தொழில்நுட்பத்தின் விரிவான பயன்பாடு குறித்தும் விளக்கப்பட்டது. இந்த நேரத்தில் இவிஎம் -விவிபேட் செயல்பாட்டின் போது அன்னாலெனா பேர்பாக் தனிப்பட்ட முறையில் இவிஎம் மூலம் வாக்களித்தார். இவிஎம்களின் பாதுகாப்பு அம்சங்கள், கையாளுதல், இயக்கம், சேமிப்பு, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தேசிய ஆயுஷ் நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details