தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

“குழந்தைகளையும் பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்வேன்” - எல்லை தாண்டி திருமணம் செய்த அஞ்சு விவகாரம்..

திருமணமான பின்னும் முகநூல் காதலனுக்காக எல்லை தாண்டி பாக்கிஸ்தானுக்கு சென்ற இந்திய பெண்மணி அஞ்சு தற்போது குழந்தைகளையும் தன்னோடு அழைத்து செல்லப் போவதாக கூறியுள்ளார்.

எல்லை தாண்டி திருமணம் செய்த அஞ்சு விவகாரம்
எல்லை தாண்டி திருமணம் செய்த அஞ்சு விவகாரம்

By

Published : Aug 2, 2023, 1:25 PM IST

குவாலியர் (மத்திய பிரதேசம்): உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண்மணி அஞ்சு (34). இவர் திருமணமாகி அவரது கணவர் அரவிந்த், 15 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் ராஜஸ்தானில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், அஞ்சுவுக்கு ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா (29) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அஞ்சு தனது கணவரிடம் ஜெய்ப்பூர் செல்வதாக கூறிவிட்டு, அவரது காதலனைப் பார்க்க பாகிஸ்தான் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த பெண் திருமணமான தனது உறவை விடுத்து காதலனைத்தேடி பாக்கிஸ்தான் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவியது.

மேலும், அஞ்சு பாக்கிஸ்தான் சென்றது மட்டுமின்றி அவரது ஃபேஸ்புக் காதலன் நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டு, மதம் மாறி தனது பெயரை பாத்திமா என்றும் மாற்றிக் கொண்டார். பின்னர் இவர்கள் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவின. இதனால் அதிருப்தி அடைந்த அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ், தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது மகள் செய்தது மிகப்பெரிய துரோகம் என்றும் “எங்களை பொறுத்தவரை அஞ்சு இறந்துவிட்டாள்” என்றும் கூறி அவரது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர், அஞ்சு தனது மருமகன் அரவிந்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மிரட்டி வருவதாக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். அதில் அவர் “அஞ்சு குழந்தைகளை தன்னோடு பாக்கிஸ்தானுக்கு அழைத்து செல்லப்போவதாகவும், அதற்கான அனைத்து உரிமையும் தனக்கு உள்ளது என்றும் எனது மருமகனை மிரட்டினாள். நான் முன்பு கூறியதைப் போல எங்களைப் பொருத்த வரை அஞ்சு என்றோ இறந்துவிட்டாள், அவளது செயல்கள் எங்களுக்கு களங்கம். அவள் செய்ததை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க அஞ்சு திடீரென பாக்கிஸ்தான் சென்றது, திருமணம் செய்தது உள்ளிட்ட அனைத்தும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்ற கோணத்தில் குவாலியர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அஞ்சு சட்ட விரோதமாக பாக்கிஸ்தானுக்குள் நுழைந்தார? என்ற சந்தேகமும் இருந்து வந்தது.

இதனால், மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, தாமஸ் குடும்பம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தேகன்பூரில் உள்ள போனா கிராமத்தில் விசாரணைக்காக அஞ்சுவின் தந்தையை போலீசார் நேற்று (ஆகஸ்ட் 1) செவ்வாய்க்கிழமை அழைத்தனர்.

குவாலியர் காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் சிங் சண்டேல் இதுகுறித்து கூறுகையில், “அஞ்சுவின் குடும்பம் காவல்துறையின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவர்களது ஒவ்வொரு அசைவையும் காவல்துறை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் கூறினார். மேலும் எஸ்பி சாண்டல் கூறுகையில், அஞ்சு குடும்பத்தின் அனைத்து ஆவணங்களையும், மொபைல் பதிவுகளையும் சரிபார்த்து வருகிறோம்.

அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அஞ்சு குடும்பத்தின் உறவினர்கள் மற்றும் அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்” எனவும் தெரிவித்தார். மேலும் விசாரணையில் அஞ்சு இந்தியாவிலிருந்து வாகா-அட்டாரி எல்லை வழியாக சட்டப்பூர்வமாக பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:சுருக்குமடி வலையை தடைசெய்யும் வரை வேலைநிறுத்தம்: 18 மீனவ கிராம கூட்டத்தில் தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details