உத்தரப் பிரதேசம்:உத்தரப்பிரதேச மாநிலம், அலிகர் மாவட்டத்தில் கால்நடை மருத்துவர் ஒருவர், ஆமை ஒன்றின் ஓட்டில் அரிய அறுவை சிகிச்சை செய்து ஆமைக்கு உயிர் கொடுத்தார். இந்த ஆமைக்கு மூன்று வயது இருந்தபோது, உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. பின்னர் ஆமையை நாய் தூக்கிச் சென்றதில் அதன் ஓட்டில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆமை நடப்பதில் சிக்கல் ஏற்பட்டு, ஓட்டில் ஏற்பட்ட விரிசலில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியது. ஆமையின் உடைந்த ஓடுக்கு இரும்புக்கம்பி மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இது பிரேஸ்கள் அல்லது ஸ்பிளிண்ட் என்று அழைக்கப்படுகிறது. இதுபொதுவாக வளைந்த பற்களைக் கட்டப் பயன்படுகிறது.
இதுகுறித்து, உத்தரப்பிரதேச மாநிலம், காசிம்பூரில் வசிக்கும் ஆமையின் உரிமையாளர் சுதிர் கூறுகையில், 'கடந்த 3 ஆண்டுகளாக ஆமை ஒன்றை வளர்த்து வருகிறேன். நான், அன்புடன் டோட்டோ என்று அந்த ஆமையை அழைத்து வருகிறேன். ஒரு மாதத்திற்கு முன், உயரத்தில் வைக்கப்பட்டிருந்த மீன்பெட்டியில் இருந்து ஆமை கீழே விழுந்தது.
இதையடுத்து, அங்கிருந்த ஆமையை நாய் ஒன்று தூக்கி சென்றதால், ஆமை ஓட்டில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து விரிசல் ஏற்பட்ட இடத்தில், ஆமைக்கு தொற்று பரவியது. இந்த கடுமையான காயம் காரணமாக, ஆமை தண்ணீரில் நடக்கவும், நீந்தவும் சிரமப்படத் தொடங்கியது. எனவே, கால்நடை மருத்துவரிடம் எனது ஆமையைக் காட்டினேன்’’ என்றார். மேலும் இது குறித்து சுதிர் கூறுகையில், “ஆமையின் ஓடு அதன் உடலின் ஒரு முக்கிய அங்கமாகும். இது அதன் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது.