தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரியுங்கள்- உத்தவ் தாக்கரேவுக்கு, அனில் தேஷ்முக் கடிதம்! - விசாரணை

“என் மீதான குற்றச்சாட்டுகளை விசாரியுங்கள்” என முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கடிதம் வாயிலாக கூறியுள்ளார்.

Anil Desmukh writes to Uddhav Thackeray Anil Desmukh Uddhav Thackeray Param Bir Singh உத்தவ் தாக்கரே அனில் தேஷ்முக் ஊழல் புகார் விசாரணை கடிதம்
Anil Desmukh writes to Uddhav Thackeray Anil Desmukh Uddhav Thackeray Param Bir Singh உத்தவ் தாக்கரே அனில் தேஷ்முக் ஊழல் புகார் விசாரணை கடிதம்

By

Published : Mar 25, 2021, 11:35 AM IST

மும்பை: மும்பை முன்னாள் காவல்துறைத் தலைவர் பரம்பிர் சிங் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் புதன்கிழமை (மார்ச் 24) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “மும்பையின் முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிக்க முதலமைச்சரிடம் கேட்டுள்ளேன்” என மராத்தியில் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், "இந்த விவகாரத்தை முதலமைச்சர் விசாரித்தால் நான் அதை வரவேற்கிறேன். சத்தியமேவ ஜெயதே" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங், அனில் தேஷ்முக் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டி தாக்கரேக்கு கடிதம் எழுதியிருந்தார், மேலும் இடைநீக்கம் செய்யப்பட்ட உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சச்சின் வேஸிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி வசூலிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்றும் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக தலைவர்கள் குழு புதன்கிழமை (மார்ச் 24) ஆளுநரை சந்தித்து, ஆட்சி மற்றும் ஊழல் தொடர்பான பிரச்சினையில் தாக்கரேவிடம் அறிக்கை பெறுமாறு வலியுறுத்தினர்.

தொடர்ந்து பேசிய ஃபட்னாவிஸ், மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக நிலையை இழந்துவிட்டது” என்றும் கூறினார் என்பது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: ஊழலின் மையப்புள்ளியாக கேரளா மாறிவிட்டது- அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details