கர்நாடக மாநிலம் மல்லதஹள்ளியில் வசித்துவரும் சுதா என்பவர் நேற்று (ஏப். 7) தனது மூன்றரை வயது பெண் குழந்தையைக் காணவில்லை என நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய காவலர்கள், சுதா வசித்துவரும் வீட்டின் அருகிலுள்ள கட்டுமான பகுதியில் குழந்தையின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.
அத்துடன் திடுக்கிடும் தகவலும் வெளியாகியது. அதாவது, சுதா தனது கணவர் மீதுள்ள கோபத்தால் குழந்தையைக் கொலைசெய்துள்ளார். அத்துடன் உடலை கட்டுமான பகுதியில் வீசியுள்ளார்.
சந்தேகம் ஏற்படாமலிருக்க காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் உடல் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் சுதா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக முதியவரை கொலை செய்த 14 பேர் கைது!