காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் பிரதமர் மோடியைப் புகழ்ந்ததாகவும் கூறி அவரது உருவபொம்மையை எரித்து அக்கட்சியினர் ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் கட்சியைப் பலவீனப்படுத்தும் வகையில் தலைமையை எதிர்த்து கடிதம் எழுதிய 23 பேரை அழைத்து ஆசாத் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
பாஜகவின் தூண்டுதலின்பேரில் அவர் இதனைச் செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தைப் பறித்த மோடியை ஆசாத் புகழ்ந்துள்ளார். ஒரு காங்கிரஸ் தொண்டரால் அதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். பலமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும், ஏன் முதலமைச்சராகவும்கூட இருந்திருக்கிறார்.