மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தனது திருமணத்தை மீறிய உறவினை தட்டிக்கேட்ட கணவருக்கு, காதலுனுடன் சேர்ந்து மனைவி மயக்க ஊசி போட்டதால், கணவர் 33 நாள் கோமாவிற்குச்சென்ற பிறகு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் பெயர் சதீஷ் கேசவ்ராவ் தேஷ்முக். இவர் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேஷ்முக்கின் மனைவி சுஹாசினி மீது சில நாட்களாகவே தேஷ்முக்கிற்கு சந்தேகம் இருந்து வந்தது. ஒருநாள் அவரது மனைவி மற்றும் அவரது காதலனான அருண் காண்டேகர் ஆகியோர் செப்டம்பர் 10ஆம் தேதி மருத்துவமனையில் இருந்தனர்.
அப்போது அவர்களிடம் இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து கேட்டபோது மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை விட்டு காதலன் வெளியேறிய நிலையில், மனைவி சுஹாசினி தனது கணவருடன் மருத்துவமனையின் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு காதலனின் உதவியுடன் மயக்க ஊசி போட்டு கணவரை கொல்ல முயன்றுள்ளார்.