தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

என்று தணியும் இந்த செல்ஃபி மோகம் - பாம்புடன் செல்ஃபி .. தீண்டிய நாகத்தால் இளைஞர் பரிதாப பலி! - Andra Pradesh man Die while taking selfie cobra

ஆந்திராவில் நாகப்பாம்புடன் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர், அந்த பாம்பு தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாகப் பாம்பு
நாகப் பாம்பு

By

Published : Jan 25, 2023, 8:57 PM IST

நெல்லூர்:ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், மங்களம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர், ஜெகதீஷ். 24 வயதான ஜெகதீஷ் தன் நண்பர்களுடன் சேர்ந்து சாலையில் அரட்டையடித்துக் கொண்டு இருந்துள்ளார். அந்த வழியாக பாம்புகளை கொண்டு வித்தை காட்டுபவர் சென்றுள்ளார்.

அவரை வழிமறித்த ஜெகதீஷ், பாம்புகளை காட்டுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. பாம்பாட்டியிடம் இருந்து நாகப்பாம்பை பெற்ற ஜெகதீஷ், ஆபத்தை உணராமல், அதனுடன் சேர்ந்து வித்தை காட்ட முயன்றதாக கூறப்படுகிறது. தன் தோள் மீது பாம்பை வைத்து அதனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஜெகதீஷ் திட்டமிட்டுள்ளார்.

தோள் மீது நாகப்பாம்பை ஜெகதீஷ் வைக்க முயன்ற, அவரது கைப் பகுதியில் பாம்பு தீண்டியது. பாம்பு தீண்டியதால் பதற்றத்திற்குள்ளான ஜெகதீசை அருகில் இருந்த நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் ஜெகதீஷ் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். விபரீத விளையாட்டால் இளைஞர் வீணாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பக்தர்களுடன் பேசும் சிலிக்கான் சாய் பாபா.. ஆந்திராவில் குவியும் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details