தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் கோர விபத்து: 9 பேர் பலி - ஆந்திராவில் கார்- லாரி நேருக்கு நேர் மோதல்

ஆந்திராவின் அனந்த்பூர் பகுதியில் ஒரு கார் லாரி மீது மோதியதில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆந்திராவில் கோர விபத்து ; 9 பேர் பலி!
ஆந்திராவில் கோர விபத்து ; 9 பேர் பலி!

By

Published : Feb 7, 2022, 10:06 AM IST

ஆந்திரப் பிரதேசம்: ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் உரவகொண்டாவின் புத்தாகவி கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் அருகே உள்ள சாலையில் கர்நாடகவில் உள்ள உறவினர் திருமண விழாவிற்கு அனந்த்பூருக்குத் திரும்பிய ஒன்பது பேர் கார் ஒன்றில் வந்துகொண்டிருந்தனர். எதிரே வந்த சரக்கு லாரியின் மீது கார் தாறுமாறாக மோதியது.

கார் மோதிய விபத்தால் காரின் உள்ளே இருந்த ஒன்பது பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடல்களைக் கைப்பற்றினர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: அருணாச்சலப் பிரதேசத்தில் நிலஅதிர்வு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details