ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ப்ரனாய் (வயது 29). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கனடாவில் பணிபுரிந்து வருகிறார்.
இவரும், கனடாவில் உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஆறு மாதங்களுக்கு முன்னதாக சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு சில நாள்களில் காதலாக மாற இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இதைப்பற்றி குடும்பத்தினரிடம் கூறி, கரோனா சூழல் கட்டுக்குள் வந்தபின் திருமணம் செய்வதற்கு இருவரும் அனுமதியும் பெற்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு திடீரென அமெரிக்காவுக்கு செல்வதற்கு விசா கிடைத்துள்ளது. தொடர்ந்து அவர் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார்.