தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திர கிராம பஞ்சாயத்துத் தலைவர் பழங்கள் விற்கும் அவலம்! - Panchayat leader sells fruits

ஆரமல்லா விஜய குமார் வத்திசெருகுரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் கிராம பஞ்சாயத்து கணக்கில் பணம் எடுக்கப்பட்டதால் பணிகள் செய்ய மாநில அரசிடம் நிதி இல்லை என்றும் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை என்றும் புகார் அளித்துள்ளார்

ஆந்திர கிராம பஞ்சாயத்து தலைவர் பழங்கள் விற்கும் அவலம்
ஆந்திர கிராம பஞ்சாயத்து தலைவர் பழங்கள் விற்கும் அவலம்

By

Published : May 17, 2022, 5:15 PM IST

Updated : May 17, 2022, 5:27 PM IST

குண்டூர்: ஆரமல்லா விஜய குமார் என்பவர், வத்திசெருகுரு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் (ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிரதிபாடு தொகுதி) கிராமப் பஞ்சாயத்துக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டதால், பணிகள் செய்ய மாநில அரசிடம் நிதி இல்லை என்றும், மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை என்றும் புகார் அளித்துள்ளார். மக்களுக்கு சேவை செய்ய நிதி இல்லாததால் அலுவலகத்திற்கு செல்வதில்லை என கூறினார்.

கிராமத்தினர் தன்னை நம்பி வாக்களித்ததாகவும், அவர்களது பிரச்சனைகளை தீர்க்க தான் ரூ.6 லட்சம் கடன் வாங்கி பல்வேறு விஷயங்களை செய்தும் அதற்கான ரசீதுகளுக்கு அரசிடம் இருந்து நிதி வராததால் சிரமத்தில் உள்ளதாக கூறினார். கிராம பஞ்சாயத்து கணக்கில் நிதிக்குழுவின் மின்கட்டணத்தின் கீழ் மாநில அரசு ரூ.17 லட்ச ரூபாயை டெபாசிட் செய்துள்ளது எனவும் கூறினார்.

கிராமத்தில் உள்ள பசுமைத் தூதுவர்களுக்கு 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், அவர்களின் தேவைக்காக சொந்த செலவில் இருந்து ஊதியம் வழங்கப்படுவதாகவும் பஞ்சாயத்து தலைவர் கூறினார். நான் பண வசதியில்லாமல் தேங்காய் மற்றும் பழங்கள் விற்கிறேன். மாநில அரசு கிராம பஞ்சாயத்திற்கு நிதி வழங்க வேண்டும் விஜய் குமார் கூறினார்

எங்கள் பெரிய பஞ்சாயத்து கிராமத்தில் தினமும் 3 மணி நேரம் மின்சாரம் இல்லை. சிறு குழந்தைகள், முதியவர்கள் இரவு நேரங்களில் சிரமப்படுகின்றனர். கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தில் பணம் இல்லை என்றால் எப்படி சுத்திகரிப்பு செய்து கொசு மருந்து அடிப்பது? "குழாய் கசிவை எப்படி நிறுத்துவது?" - பஞ்சாயத்து தலைவர் விஜய் குமார்.

இதையும் படிங்க:திருப்பதியில் தலைவி தரிசனம்... வேண்டுதல் என்ன தெரியுமா..?

Last Updated : May 17, 2022, 5:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details