ஆந்திரா:வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கியது. ஆந்திராவின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் மக்கள் மழையின் தாக்கத்தில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் நேற்று முதல் மழை சற்று குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள அதிகாரிகள், ''மழை குறைந்துள்ளது. ஆனால், வெள்ளப்பெருக்கு இதுவரை குறையவில்லை. படிப்படியாக குறையும்'' என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே வெள்ளத்தில் தத்தளித்து வரும் ஸ்ரீகாகுளம் மாவட்டம், சந்தபொம்மாலி அடுத்த பழைய மேகவரம் மற்றும் மருவாடா கடற்கரை பகுதிக்கு இடையே நீலத்திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இதையும் படிங்க:மதுரை மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் வெற்றியை எதிர்த்த வழக்கு - உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
சுமார் 24 அடி உயரமும், மூன்றரை டன் எடையும் கொண்ட அந்த திமிங்கலத்தை அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் குழந்தைகள் தொட்டு பார்த்து ஆச்சரியப்பட்டனர். கடலில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக அந்த திமிங்கலம் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகளும், மீனவ மக்களும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகி உள்ளது.