ஆந்திராவில் துவரு மண்டலத்தின் இந்திரம்மா காலனியில் 70 வயதான வெங்கடம்மா என்ற மூதாட்டி, விவசாய வேலைக்காக தோண்டப்பட்ட கிணற்றில் எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்துள்ளார். விழுந்த அவர் தொடர்ந்து உதவி கேட்டு கூக்குரலிட்டு அழுதுள்ளார்.
30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி: விரைந்து மீட்ட காவல் துறையினர்! - 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மூதாட்டி
ஆந்திரா: விவசாய வேலைக்காக தோண்டப்பட்ட 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை, கடப்பா மாவட்டக் காவல் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி : விரைந்து மீட்ட காவல்துறையினர்
அவரது அழுகுரல் கேட்டு அங்கு ஆடு மேய்த்துக் கோண்டிருந்தவர்கள் ஓடிவந்து கிணற்றுள் எட்டிப்பார்த்து, விபரமறிந்து அவரது கிராமவாசிகளுக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராமவாசிகளின் உதவியுடன் காயமடைந்த மூதாட்டியை மீட்டனர். தொடர்ந்து, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் பொருடுதுரு மருத்துவமனைக்கு மூதாட்டி கொண்டு செல்லப்பட்டார்.