அமராவதி:பூர்வீக பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து ஆந்திர மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கவுன்சில் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரப்பட்டியலில், “ ஆந்திராவாவில் மொத்தமாக 1.33 லட்சம் பூர்வீக பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். குறிப்பாக கர்னூல், சித்தூர் மற்றும் அனந்தபூர் மாவட்டங்களில் பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில், கடப்பா மாவட்டத்தில் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
2021ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடத்தப்பட்ட ஆய்வின்படி, நாட்டில் மொத்தம் 8 லட்சத்து 25 ஆயிரத்து 55 பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 447 பாலியல் தொழிலாளர்கள் ஆந்திரப் பிரதேசத்திலும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 288 பாலியல் தொழிலாளர்கள் கர்நாடகாவிலும், தெலுங்கானாவில் 1 லட்சத்து 818 பேரும், தமிழ்நாட்டில் 65 ஆயிரத்து 818 பேரும் உள்ளனர்.