அமராவதி:ஆந்திராவில் கோயில் சிலைகள், உடமைகள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி ஜி.வி. அசோக் குமார் தலைமையில் 16 பேர் கொண்ட சிறப்புக் குழுவினை அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவானது கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்ற கோயில் மீதான தாக்குதல் குறித்த குற்றச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளது.
மேலும், இக்குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், தடவியல் நிபுணர் குழு மற்றும் சிஐடி செய்யும் எனத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குற்றச்சம்பவங்கள் நடைபெற்ற மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து இதுபோன்ற குற்றச்சம்பங்கள் தொடர்பான விசாரணையை சிறப்பு குழுத் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.