தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மார்கதர்சியின் ரூ.1,050 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவு செல்லாது: ஆந்திரா நீதிமன்றம் அதிரடி! - குண்டூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம்

Margadarsi: சிட் ஃபண்ட் தொகை முதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்களுக்கு செலுத்த தவறியதாக குற்றம்சாட்டி மார்கதர்சி நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.1,050 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய ஆந்திர சிஐடி பிறப்பித்த மூன்று உத்தரவுகளை குண்டூர் மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Forfeiture of Margadarsi's property is not Valid
மார்கதர்சி நிறுவன சொத்து பறிமுதல் வழக்கு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 12:42 PM IST

Updated : Dec 12, 2023, 1:30 PM IST

அமராவதி:மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனத்தின் ரூ.1,050 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்யக்கோரி ஆந்திரப் பிரதேச சிஐடி பிறப்பித்த மூன்று உத்தரவுகளை குண்டூர் மாவட்ட முதன்மை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மார்கதர்சி சிட் ஃபண்ட் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு முதிர்ச்சியடைந்த தொகையை செலுத்தத் தவறியதாக சிஐடியால் நிரூபிக்க முடியாததை அடுத்து, ஆந்திரப் பிரதேச சிஐடி ஏடிஜிபி தாக்கல் செய்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மே மாதம் 29ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை 104, ஜூன் மாதம் 15ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை 116, ஜூலை மாதம் 27ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை 134 ஆகிய உத்தரவுகளின் படி, மார்கதர்சி நிறுவனத்தின் ரூ.1,050 கோடி மதிப்பிலான சொத்துக்களை இடைக்காலமாக பறிமுதல் (ad interim) செய்ய சிஐடி தாக்கல் செய்த மனுக்களை நீண்ட விசாரணைக்குப் பிறகு குண்டூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஒய்.வி.எஸ்.பி.ஜி.பார்த்தசாரதி ரத்து செய்தார்.

இந்த வழக்கில் மார்கதர்சி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் போசானி வெங்கடேஸ்வரலு, வழக்கறிஞர் பி.ராஜாராவ் ஆகியோர், பணம் செலுத்தாதது குறித்து எந்த சந்தாதாரரும் புகார் தெரிவிக்காத பட்சத்தில், சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான காரணமே எழவில்லை என வாதங்களை முன்வைத்தனர்.

மேலும், மார்கதர்சியின் வணிக நடவடிக்கைகள் சிட் ஃபண்ட் விதிகளுக்கு உட்பட்டது என்பதை வலியுறுத்திய வழக்கறிஞர்கள், சந்தாதாரர்களைப் பாதுகாக்கும் போர்வையில் அரசும், சிஐடியும் சொத்துக்களை பறிமுதல் செய்வதாக குற்றம்சாட்டினர். சிட் நிர்வாகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அவர் சிட் ஃபண்ட் சட்ட விதிகளின் படி கையாளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிஐடி டெபாசிட்டர்கள் (AP Depositors Act-1999) சட்டத்தின் படி சொத்துக்களை கைப்பற்ற முயலுவதாகத் தெரிவித்தனர்.

நிர்வாகம் சந்தாதாரர்களின் முதிர்ச்சியடைந்த பணத்தை செலுத்தவில்லை என புகார் ஏதும் இல்லாதபட்சத்தில் சொத்துக்களை பறிமுதல் செய்வது சந்தாதாரர்களின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மார்கதர்சி நிறுவனம் நான்கு மாநிலங்களில் செயல்பட்டு வரும் நிலையில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஆந்திர சிஐடியின் குற்றச்சாட்டுக்கு பின்னால் தீங்கு செய்யும் நோக்கம் உள்ளது.

பணம் செலுத்தப்படாத சந்தாதாரர்களின் விபரங்கள் மற்றும் பண விவரங்கள் ஆகியவற்றை நீதிமன்றம் உத்தரவிட்டும் சிஐடி நீதிமன்றத்தில் ஆதாரங்களை சமர்பிக்கவில்லை. மார்கதர்சி சந்தாதாரர்களுக்கு பணத்தை வழங்கத் தவறி விட்டது என்பதை நிரூபிக்க சிஐடி தவறிவிட்டது.

சொத்துக்களை பறிமுதல் செய்வது வெறும் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது என வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர். மேலும், மார்கதர்சி நிறுவனத்தின் தரப்பு வ்ழக்கறிஞர்கள் சிஐடியின் மனுக்களை நிராகரிக்கும் படியும் நீதிமன்றத்தில் வலியுறுத்தினர்.

சந்தாதாரர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சிஐடி தரப்பு வழக்கறிஞர் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி, சந்தாதாரர்களுக்கு மார்கதர்சி பணம் வழங்கவில்லை என்பதை சிஐடியால் நிரூபிக்க முடியவில்லை எனக்கூறி, சொத்துக்களை இடைக்காலமாக பறிமுதல் செய்வதற்காக அரசு வெளியிட்ட 104, 116, 134 என மூன்று அரசாணைகளையும், அதனுடன் சேர்ந்த சிஐடியால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஆந்திரா பக்தர்கள் மீது தாக்குதல்; அண்ணாமலை கண்டனம்.. கோயில் நிர்வாகத்தின் விளக்கம் என்ன?

Last Updated : Dec 12, 2023, 1:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details