அமராவதி: ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்க அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். அமராவதியில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நகரத்தை உருவாக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன.
இந்நிலையில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான ஜெகன் மோகன் ரெட்டி அரசாங்கம் ஆட்சி அமைந்தது. தொடர்ந்து ரெட்டி அதிகாரத்துக்கு வந்ததும் அமராவதியில் நிலங்கள் கையகப்படுத்துவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி பல்வேறு ஒப்பந்தங்கள் இரத்து செய்யப்பட்டன. மேலும், வழக்குகள் பதியப்பட்டு விசாரணை நடைபெற்றன.