தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் பழங்கால தமிழ் கல்வெட்டு கண்டெடுப்பு!

ஆந்திராவில் 710 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

BAYATAPADDA
BAYATAPADDA

By

Published : Aug 3, 2021, 6:18 PM IST

பிரகாசம் (ஆந்திரா): ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டம் சிராலா அருகேயுள்ள மோட்டுபள்ளி என்ற கிராமத்தில் காகத்திய ஆட்சி காலத்தைச் சேர்ந்த 14ஆம் ஆண்டு தமிழ் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கோதண்ட ராமசாமி கோயிலில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. 700 ஆண்டுகள் பழமையான இந்தக் கல்வெட்டு தமிழ் மற்றும் கிரந்த எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டு குறித்து மோட்டுபள்ளி பாரம்பரிய சங்கத் தலைவர் டாக்டர். நாகிரெட்டி, ஆர். தசரத ரெட்டி ஆகியோர் கூறுகையில், “இந்தக் கல்வெட்டு காகதிய வம்சத்தை சேர்ந்த இரண்டாம் பிரதாபருத்ரா காலத்தைச் சேர்ந்தது.

இங்கு தமிழ் மக்களின் குடியிருப்புகள் இருந்துள்ளன. அந்தத் தமிழ் மக்களுக்காக கல்வெட்டு தமிழில் பொறிக்கப்பட்டிருக்கலாம். இந்தக் கல்வெட்டு திருவிடையாட்டம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

தமிழ் கல்வெட்டுகள்

கல்வெட்டில் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலங்கள் குறித்த விவரங்கள் உள்ளன. கல்வெட்டானது கோயிலின் முன் மண்டப சுவர்களிலே பொறிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி. 1308 ஆண்டுகள் ஆகும். இதனை இந்திய தொற்பொருள் ஆய்வாளர் டாக்டர். கே. முனிரத்னம் ரெட்டி உறுதிசெய்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “கல்வெட்டில் 813 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ், கிரந்த எழுத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ராஜ நாராயண பெருமாளுக்கு அளிக்கப்பட்ட திருவிடையாட்டம் குறித்து கல்வெட்டு குறிப்பிடுகிறது” என்றார்.

கடைசி காகதிய ஆட்சியாளர் பிரதாபருத்ரா நினைவாக திருவிடையாட்டம் தானமாக அளிக்கப்பட்டுள்ளன. திருவிடையாட்டம் என்பது திருமால் கோயிலுக்கு நிலங்கள் தானமாக அளிக்கப்படுவது ஆகும். இந்த நிலங்கள் கோயிலின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.

பிரதாபருத்ரா காலத்துக்கு முந்தைய கணபதி தேவா ஆட்சிக் காலத்திற்கு இடைப்பட்ட தமிழ் கல்வெட்டு என்பதால் இது அதிமுக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டாக கருதப்படுகிறது.

கல்வெட்டில் உள்ள அபய முத்திரை கடல் வழி வணிகர்களின் பாதுகாப்பு குறித்து குறிப்பிடுகிறது. மேலும் ராஜ நாராயண சுவாமிக்கு நிலங்களை தானமாக வழங்கியவர்கள் பெயர்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்தப் பெயர்கள், கட்டாந்தை, செம்மனடியாள், வலும்போதலகியன் என்ற பதினென்பூமி, வனிகராதித்யன் ஆகும்.

இந்நிலையில் கல்வெட்டின் முக்கியத்துவம் கருதி இதனை மாநில அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க : மிதக்கும் கற்களால் உருவாக்கப்பட்ட ராமப்பா கோயில்!

ABOUT THE AUTHOR

...view details