இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார். இதன்மூலம் அவர் முதல்முறையாக இந்திய வம்சாவளியினைச் சார்ந்த இங்கிலாந்து பிரதமராகவும், இங்கிலாந்தின் முதல் இந்து மதத்தைச்சார்ந்த பிரதமராகவும் அறியப்படவுள்ளார்.
பிரதமர் பதவிக்கு போட்டியிட்ட நாடாளுமன்ற முன்னவர் பென்னி மார்டண்ட் போட்டியில் இருந்து விலகியதால், கட்சியின் தலைவர் ஆனார், ரிஷி சுனக். முன்னதாக இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், "மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷி சுனக்! நீங்கள் இங்கிலாந்து பிரதமராக வரும்போது, உலகளாவிய பிரச்னைகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவோம் என நான் எதிர்பார்க்கிறேன். தீபாவளி வாழ்த்துகள்" எனப் பதிவிட்டுள்ளார்.
ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகிறார்
பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பதிவில், "1947ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின்போது, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அனைத்து இந்தியத்தலைவர்களும் குறைந்த திறன் கொண்டவர்களாகவும் வைக்கோல் மனிதர்களாகவும் இருப்பார்கள் என்று கூறினார். இன்று, நமது சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டில், இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்பதைக் காண நாங்கள் தயாராக உள்ளோம். வாழ்க்கை அழகானது" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல்முறையாக இந்திய வம்சாவளியினைச் சார்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராகிறார்!