சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை. தன்னுடைய ஆட்டோவில் இலவச வைஃபை, தமிழ், ஆங்கில நாளிதழ்கள், லேப்டாப், ஃபிரிட்ஜ் எனப் பல்வேறு வசதிகளை செய்து பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார். சென்னை ஐடி பணியாளர்கள் அதிகம் பயணிக்கும் ஓஎம்ஆர் சாலையில் ஆட்டோ ஓட்டி வருகிறார். பயணிகளின் வசதிக்காக அவரின் சின்ன ஆட்டோக்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அன்னையர் தினம், குழந்தைகள் தினம் ஆகிய நாள்களில் தள்ளுபடி விலையில் சவாரி என ஆச்சரியப்படுத்துகிறார். இவரின் ஆட்டோவில் பயணம் செய்ய கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. பயணிகள் கட்டணம் செலுத்த ஏதுவாக ஸ்வைப்பிங் மிஷன் வசதியும் வைத்துள்ளார். இவரின் ஓட்டோவில் பயணிக்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.