தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒலிம்பிக்கில் தோசை சப்ளை போட்டி? - ஆனந்த் மஹிந்திரா ருசிகரம் - dosa supply video

13 பிளேட் தோசையை ஒரே கையில் வைத்துக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறிய ஹோட்டல் வெயிட்டருக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

ஒலிம்பிக்கில் தோசை சப்ளை போட்டியா..? - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்
ஒலிம்பிக்கில் தோசை சப்ளை போட்டியா..? - ஆனந்த் மஹிந்திரா ட்வீட்

By

Published : Feb 1, 2023, 10:59 AM IST

டெல்லி: பிரபல தொழில் நிறுவனமான மஹிந்திரா குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஹோட்டலில் உள்ள பெரிய தோசைக் கல்லில் பிரபல தென்னிந்திய உணவான தோசை சுடப்படுகிறது. அவை அனைத்தும் ஒவ்வொரு தட்டிலும் எடுத்து வைக்கப்படுகிறது.

இதனை ஹோட்டல் வெயிட்டர் ஒருவர், ஒவ்வொன்றாக தனது ஒரு கையில் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கிறார். மொத்தம் 13 தோசை தட்டுகளை ஒரே கையில் தாங்கியபடி, வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்துக்கு கொண்டு சென்று பரிமாறுகிறார்.

இதற்கு, “இந்த வெயிட்டரின் திறனை ஒலிம்பிக் விளையாட்டில் அங்கீகரிக்க வேண்டும். இந்த மனிதர் அந்த விளையாட்டில் தங்கப் பதக்கத்தை பெறும் போட்டியாளராக இருப்பார்” என ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:மூளையின் செயல்பாட்டில் பின்னடைவை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

ABOUT THE AUTHOR

...view details