இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் அக்னிபத் திட்டத்தின் தேர்வு முறையை முப்படைகளும் தொடங்கி விட்டன. கடந்த சில நாட்களாக நாட்டில் அதிகமாக அனைவராலும் பேசப்பட்டு வரும் இத்திட்டம் குறித்து அரசியல் பிரபலங்கள் தவிர்த்து அனைத்து துறையினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் அக்னிபத் திட்டத்தில் பணிகாலத்தை முடித்து வரும் வீரர்களுக்கு வேலை வழங்குவதாக ட்விட்டரில் தெரிவித்துளார்.
அக்னிவீர்களுக்கு வேலை- ஆனந்த் மகேந்திரா அதிரடி ட்வீட் - controversy Army recruitment
அக்னிபத் திட்டத்திற்கு பின் வெளிவரும் வீரர்களுக்கு வேலை வழங்குவதாக ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா அவரது ட்விட்டர் பக்கத்தில் அக்னிவீர்களுக்கு மஹிந்திரா நிறுவனம் எந்த மாதிரியான பணிகளை வழங்கும் என கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அக்கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களின் வேலைவாய்ப்புக்கான பெரிய வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். அவர்களின் பணியில் தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் உடல் பயிற்சி ஆகியவை உள்ளடங்கியிருக்கும். மேலும் அக்னிவீர்கள் தொழில்துறைக்கு சந்தைக்கு ஏற்ற தொழில்முறை தீர்வுகளை வழங்கும் வகையில் செயல்பட வேண்டும்.தொழில் நிர்வாகத்தையும் கண்காணிக்கும் வகையில் அமைந்திருக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:பாஜக அலுவலக பாதுகாப்பு பணியில் அக்னி வீர்களுக்கு முன்னூரிமை - பாஜக மூத்த தலைவர் சர்ச்சை கருத்து