ஹைதராபாத்:Anandh Mahindra offers for Common Man: மஹாராஷ்டிரா மாநிலம், சங்கிலி மாவட்டத்தைச் சேர்ந்த தத்தாராயா லோகர் என்பவர், தன் மகனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சிறிய நான்கு சக்கர வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
பழைய உலோகப் பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தின் உதிரி பாகங்களைக் கொண்டு இந்த வாகனத்தை உருவாக்கியுள்ளார்.
அனைவருக்கும் கார் வாங்க வேண்டும் என்ற கனவு இருக்கும். அது போல லோஹரின் மகனுக்கும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்ற கனவு இருந்து வந்தது. இந்த கனவினை நிறைவேற்ற லோகரிடம் போதுமான பொருளாதார வசதி இல்லை. இருப்பினும், மகனின் ஆசையை நிறைவேற்ற லோகர் முயன்றார்.
இந்த முயற்சியின் விளைவாக, அவரே தன்னிடம் உள்ள உலோகப் பொருட்களைக் கொண்டு புது மாதிரியான வாகனம் தயாரிக்கத் தொடங்கினார்.
2 ஆண்டுகால உழைப்பு
இதற்கானப் பணிகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே லோகர் தொடங்கி உள்ளார். இதற்கான பாகங்களுக்காக அவரிடமிருந்த பழைய உலோகங்கள் மற்றும் இரு சக்கர வாகனத்தின் உதிரிகளைப் பயன்படுத்தி உள்ளார். மேலும் தேவையான, மீதான பகுதிகளை வெளியில் வாங்கியுள்ளார்.