இந்தியாவின் முன்னணி தொழிலதிபராகவும், மஹிந்திரா நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா, உலகம் முழுவதும் ஆக்கப்பூர்வமாகவும், ஆச்சர்யப்படும் வகையிலும் இருக்கும் விஷயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பாராட்டி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது, ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ள காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து தலைமுறை ஆண்களின் காணொலியாகும்.
காணொலி பகிர்ந்த ஆனந்த மஹிந்திரா, அதில் சில வாசகங்களையும் இணைத்துள்ளார். அதில், “என்ன ஒரு ஆசீர்வாதம். 5 தலைமுறைகள் ஒன்றாக இருக்கின்றன. உலகெங்கிலும் உள்ள எத்தனை குடும்பங்களுக்கு 5 தலைமுறைகளின் இந்த அரிய பாக்கியம் கிடைத்துள்ளது. இதனை கண்டு நான் வியக்கிறேன். இந்தியாவில் இருந்து இத்தகைய வீடியோவை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நரிக்குறவர் வீட்டில் டிபன் முடித்த முதலமைச்சர் ஸ்டாலின்