டெல்லி: மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் புதிய ட்வீட்டை அவரைப் பின்தொடருபவர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
அவரது ட்விட்டர் பதிவில் தனது ஊட்டி பள்ளிப்பருவப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதிலிருக்கும் இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த தனது நண்பர்கள் நிக்கோலஸ் ஹார்ஸ்பர்க், அவரது சகோதரர் மைக்கேல் குறித்து குறிப்பிட்டு நெகிழ்ந்துள்ளார். அவர்களுக்கு நாகு, முத்து என உள்ளூர் புனைப்பெயர்கள் இருந்ததாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.