தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது - நாராயணசாமி குற்றச்சாட்டு - நாரயணசாமி

புதுச்சேரியில் ராணுவத்தை இறக்கி, அறிவிக்கப்படாத அவசர நிலை அமல் படுத்தப்பட்டு உள்ளது என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசர பிரகடம் அமல்படுத்தப்பட்டுள்ளது- நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரியில் அறிவிக்கப்படாத அவசர பிரகடம் அமல்படுத்தப்பட்டுள்ளது- நாராயணசாமி குற்றச்சாட்டு

By

Published : Oct 3, 2022, 6:52 PM IST

புதுச்சேரி:மின்சாரத்துறை ஊழியர்கள் போராட்டத்தைத்தொடர்ந்து, புதுச்சேரியில் துணை ராணுவம் இறக்கிவிடப்பட்டது தொடர்பாக அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி,

'புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கமாக்கினால் பொதுமக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காது, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மின்துறையை தனியார் மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டபோதும் அதை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது.

மின்துறையினை தனியார் மயம் ஆக்கினால் பல கோடி ரூபாய் சொத்து தனியாரிடம் ஒப்படைக்கப்படும். மின்சார கட்டணம் உயர்த்துவதோடு விவசாயிகளுக்கு வழங்கப்படக்கூடிய இலவச மின்சாரம் நிறுத்தப்படும் போன்ற அபாயங்கள் உள்ளன. மின்துறை தனியார் மயம் என்பது கொள்கை முடிவு என்று துணைநிலை ஆளுநர் குறிப்பிடுகிறார். நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே கொள்கை முடிவு ஏற்கப்படும் ஒன்றாகும்.

மின்துறை தனியார் மயமாக்குவது சம்பந்தமாக அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்காமல், பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமல் டெண்டர் விடப்பட்டுள்ளது. மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று எச்சரித்தும் துணை ராணுவத்தை புதுச்சேரியில் இறக்கியும் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனத்தை புதுச்சேரியில் இந்த அரசு அமல்படுத்தி உள்ளது.

மக்களுக்கான அரசு என்பது மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றவே தவிர, மக்களுக்கு எதிர்ப்பான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அல்ல. மின்துறை தனியார் மய டெண்டரை நிறுத்தி வைத்துவிட்டு மக்களுடன் அரசியல் கட்சிகளுடன் கருத்துகளைக்கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.

புதுச்சேரியில் மக்கள் விரோதத்திட்டங்கள் திணிக்கப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் ரங்கசாமி துணை போகிறார். மின்துறை தனியார் மயமாக்கினால் அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லக்கூடத் தயாராக உள்ளேன். பதவியை தக்க வைத்துக்கொள்வதற்காக ஆர்எஸ்எஸ் வேஷம் போட்டுக்கொண்டு அமைச்சர்கள் நடிக்கிறார்கள், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை வைத்தது தான் ஆர்எஸ்எஸ் இயக்கம்”, என்று குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க:புதுச்சேரியில் அமைதியான முறையில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி

ABOUT THE AUTHOR

...view details