தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வனப்பகுதியில் கிடந்த பணப்பை, துப்பாக்கி.. பின்னணி என்ன? - கர்நாடகா மாநில செய்திகள்

பெங்களூரு: ஜோய்தா வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பணப்பை, துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

money found
பணப்பை

By

Published : Feb 8, 2021, 8:20 PM IST

கர்நாடகா மாநிலம் குனாகினி சோதனைச் சாவடிக்கு அருகே வனத்துறையினர் இன்று (பிப்.8) ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையோரத்தில் சந்தேகத்திற்கு இடமாக கிடந்த பிளாஸ்டிக் பையை சோதனை செய்தனர். அதைத் திறந்தபோது அதனுள் பணம் இருந்தது.

இதையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இது தொடர்பாக அங்கு சோதனை நடத்தினர். இச்சோதனையில் ஒரு டீசர்ட், ஷூ, பணம் ஆகியவை ஒரு பையிலும், அங்கிருந்த கிளையொன்றில் துப்பாக்கி வைக்கப்பட்ட மற்றொரு பையும் கண்டெடுக்கப்பட்டது.

அங்கிருந்து சிறிது தூரத்தில் சில மதுபாட்டில்களையும் காவல்துறையினரும் கண்டறிந்தனர். ஜோய்தா வனப்பகுதியில் ஏற்கனவே பல குற்றச் சம்பவங்கள் நிகழும் நிலையில், அங்கிருந்து துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராமநகர காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:இன்ஸ்டாகிராமில் மார்பிங் செய்த புகைப்படத்தை மாணவிக்கு அனுப்பி மிரட்டிய இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details