தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்து மைனர் பெண்ணுடன் சுற்றியதாக மாற்று மத இளைஞருக்கு அடிஉதை - karnataka

கர்நாடகாவில் இந்து மதத்தை சேர்ந்த மைனர் பெண்ணுடன் சுற்றியதாக மாற்று மத இளைஞரை ஒரு கும்பல் கடுமையாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.

போலீஸ்
போலீஸ்

By

Published : Jan 7, 2023, 12:00 PM IST

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் குக்கே சுப்ரமண்யா பகுதியை சேர்ந்த இந்து மைனர் பெண்ணுக்கும், மாற்று மதத்தை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கல்லுகுண்டி பகுதியைச் சேர்ந்த அந்த இளைஞர், மைனர் பெண்ணுடன் ஒன்றாக சுற்றியதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில் நேற்று (ஜனவரி 6) அந்த மைனர் பெண்ணுடன் இளைஞர் வெளியே சென்றுள்ளார். அப்போது அவர்களை சூழ்ந்த கொண்ட ஒரு கும்பல், இளைஞரை கொடூரமாக தாக்கி உள்ளது. இதில் படுகாயம் அடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் தக்சின கன்னடா பகுதியில் வேறு மத இளைஞருடன் இந்து மத பெண் ஒன்றாக பேருந்தில் பயணித்ததாக கூறி, சிலர் பேருந்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details