அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் கையில் துப்பாக்கியும், கழுத்தில் புல்லட் பெல்ட் அணிந்து கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் சிறுவனின் புகைப்படம் வைரலானது. ஆன்லைனில் வைரலான புகைப்படம், போலீசார் கண்களில் பட, பூபேந்திர்சிங் மற்றும் அவரது 10 வயது மகன் மீது துப்பாக்கி கலாசாரத்தை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்தனர்.
போலீசார் விசாரணையில், மகன் துப்பாக்கி மற்றும் புல்லட் பெல்ட அணிந்த புகைப்படத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு பூபேந்தர் சிங் தன் முகநூல் புத்தகத்தில் பதிவிட்டு உள்ளார். ஏறத்தாழ 7 அண்டுகள் கழித்து புகைப்படம் வைரலான நிலையில், போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.