சித்தூர்(ஆந்திரா): ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பாங்குராபாலத்தின், மொகிலி பஞ்சாயத்தில் வசித்து வருபவர், விவசாயி ஜக்கையா. இவரது நிலமானது வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
இந்நிலையில் ஜக்கையாவின் நிலம் பல நேரங்களில் வன விலங்குகளால் சேதம் அடைந்துள்ளது. இதே போல் நேற்று (நவ-14) இரவு காட்டு யானை ஒன்று ஜக்கையாவின் நிலத்திற்கு உணவுத்தேடி வந்துள்ளது. அந்த யானை எதிர்பாராதவிதமாக அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது.
இரவில் யானையின் அலறல் சத்தம் கேட்டு ஜக்கையா மற்றும் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது யானை கிணற்றில் விழுந்து தத்தளித்துக்கொண்டு இருந்தது. இதனையடுத்து வனத்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சித்தூர் வனத்துறை தலைமை அதிகாரி சைதன்ய குமார் தலைமையில் வனத்துறையினர் ஜேசிபி மூலம் போராடி கிணற்றில் இருந்து யானையை மீட்க முயற்சி செய்தனர்.